Skip to main content

Thogai Malai - K.R Vijayan

K.R.விஜயன்               பிறப்பு : 01.01.1956 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு  அன்று ஏழை விவசாயியான            திருரெங்கசாமி கவுண்டர் &செல்லம்மாள் தம்பதியரின் தவப்புதல்வனாக கரூர் மாவட்டம் ,தோகைமலைஒன்றியத்துக்குட்பட்ட வடசேரி கிராமம்  காவல்காரன்பட்டியில் பிறந்தார்.

அரசியல் பங்கேற்பு:-
1971 ஆம் ஆண்டு தனது 15 ஆம் வயதில் மாணவ பருவதிலையே திராவிட கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு தன்னை அரசியல் மற்றும் சமூக சேவைகளில் ஈடுபடுத்தி கொண்டவர்
·        1976 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் காவல்காரன்பட்டி            கிளை கழக செயலாளராக பொறுப்பேற்றார்
·        1978 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட பிரதிநிதியாக தொடர்ந்து 10 ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார் 
·        ADMK கரூர்  மாவட்ட பேரவை பொருளாளராக 1991 முதல் 2001 வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார் 
·        1996 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை வடசேரி ஊராட்சி மன்ற தலைவராக தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று மிகச்சிறப்பான முறையில் மக்களுக்காக பணியாற்றியவர்
·        2003 ஆம் ஆண்டு புரட்சி தலைவி அம்மா அவர்களால் அடையாளம் காணப்பட்டு தோகைமலை ஒன்றிய செயலாளராக நியமிக்கபட்டு இன்று வரை தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பான முறையில் செயலாற்றி வருகிறார்
·        2011ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் கழகத்தின் சார்பில் இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட்டு கரூர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராக வெற்றி பெற்றார். இதே காலகட்டத்தில்மாவட்ட திட்ட குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு சிறப்பான முறையில் செயலாற்றியவர்
ü தோகைமலை ஒன்றிய ஆதி  திராவிடர் (மாணவர் விடுதி ) நலத்துறையின் நலக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.
2011-12ஆம் கல்வியாண்டில் நடுநிலை பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்த அரசு ஆலோசித்துக்கொண்டிருந்த பொழுது  தான் வசிக்கும் வடசேரி கிராம மக்கள் பொருளாதார மற்றும் கல்வியில் பின்தங்கி இருப்பதை கருத்தில் கொண்ட இவரது தனிப்பட்ட முயற்சியால் வடசேரி கிராமத்திற்குட்பட்ட 1.1/2 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட 1 .வடசேரி ,                             2 .காவல்காரன்பட்டி மற்றும் 3 .பாலசமுத்திரப்பட்டி ஆகிய மூன்று ஊர்களிலும் செயல்பட்டு வந்த அரசு நடுநிலை பள்ளிகளை ஒரே சமயத்தில் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்த  பெரிதும் பங்காற்றி  அதனை செயல்படுத்தி காட்டியவர்.

காவல்காரன்பட்டி அரசு நடுநிலை பள்ளி  உயர்நிலை பள்ளியாக  தரம் உயர்த்த பட்டதில் இருந்துபெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக தொடர்ந்து செயலாற்றி வருகிறார் . மேலும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு சிறப்பு வகுப்பு வசதிகளை செய்துகொடுத்துவருகிறார் ,தரம் உயர்த்தப்பட்டதில் இருந்து இந்தப்பள்ளியானது தொடர்ந்து 10 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வுகளில் 100 % மாணவ &மாணவிகளின் தேர்த்தியை பெற்று கரூர் மாவட்டத்தில் முதன்மையான அரசு பள்ளிகளில் ஒன்றாக திகழ்கிறது.
·        வடசேரி ஊராட்சிக்குட்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய  பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தொடர்ந்து கல்வி பயில உதவி செய்துவருகிறார்

Ø 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்ட முதலாவது பட்டியலில் இடம்பெற்றவர்.அச்சமயத்தில் அவரது கல்லீரல் பாதிப்புகளால் தொடர் மருத்துவ உதவி பெறவேண்டி இருந்ததால் தலைமை கழகத்தில் தானாக முன்வந்து எடுத்துக்கூறி தன்னை வேட்பாளர் பட்டியலில் இருந்து விலகிக்கொண்டவர்.பின்னர் ஓர் ஆண்டுக்கால இடைவெளியில் சென்னை , அப்போலோ மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவைசிகிசை செய்துகொண்டார் . கல்லீரல் மாற்றுஅறுவைசிகிசைக்கு பின்னர்  தற்பொழுது நல்ல உடல் தகுதியுடன் தொடர்ந்து அரசியல் மற்றும் சமூகசேவையாற்றி வருகிறார்
2011ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு நீர்ப்பிடிப்பு மேம்பாட்டு(தரிசுநில மேம்பாட்டு) திட்ட வடசேரி ஊராட்சி தலைவராக இருந்து வந்தார்

( 2013ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை BSNL திருச்சி மண்டலத்தின் தொலைத்தொடர்பு துறை ஆலோசனை குழு உறுப்பினராக(Telephone advisory committees ) செயல்பட்டவர்

கரூர் மாவட்டதில் வருவாய்  மற்றும் விவசாயிகளுக்கு சேவை வழங்குவதில்  முதலிடம் வகிக்கும் வேளாண்மை சங்கங்களின் ஒன்றான வடசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவராக  06.08.2018 அன்று பொறுப்பேற்று கொண்டு சிறந்த முறையில் செயலாற்றி வருகிறார் ..

விவசாயம் மற்றும் கால்நடை&மீன்  வளர்ப்பில் ஆர்வம் கொண்டவர் .35 வருடமாக மீன் வளர்ப்பில் ஆர்வம் கொண்டு மீன் பண்ணை அமைத்து பராமரித்து வருகிறார் .இதற்க்கான பயிற்சியினை மீன்வளத்துறை சேத்துப்பட்டு பயிற்சி நிறுவனத்தில் பயிற்சியும் பெற்றுள்ளார் ..

v 1988ஆம் ஆண்டு திருமதி விஜயா அவர்களை திருமணம்செய்துகொண்டார் ,                  திருமதி V.விஜயா அவர்களும் 2011ஆண்டு நடந்து உள்ளாட்சி மன்ற தேர்தலில் வடசேரி ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற்று சிறந்த முறையில் மக்களுக்காக பணியாற்றியவர் .இவர்களுக்கு செல்வப்ரியா என்ற மகளும் மலர்க்கோவன் என்ற மகனும் உள்ளனர் .

Comments